ரகசிய ஸà...

₹314.48

Buy From Amazon

Description

காதல், உறவு, நட்பு, ரொமான்ஸ், காதல்பிரிவு, வலி, துரோகம், சில ட்விஸ்ட்டுகள், சில திருப்பங்கள், மர்மங்கள் என கலந்த காரசாரமான தமிழ் காதல் நாவலே ரகசிய ஸ்வரூபம்….

கதை முன்னோட்டம்
அந்த வீட்டின் அறையொன்றில் தரையில் அமர்ந்து கன்னத்தில் அறைந்த காயத்தோடு கதறியழுதுக்கொண்டிருந்தாள் ஒருத்தி.
அடி வாங்கியவள் அழ, அடித்தவனும் அவளெதிரேதான். கோபமாக அல்லாமல், ஒருவித பரிவான பார்வையில் அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அவள் கன்னங்களை தாங்கியிருந்தான். சொல்லப்போனால், அழுததில் அவனுடைய விழிகளும் சிவந்து வீங்கிப் போயிருந்தன.
“கயல், நான் சொல்றதை கேளு, மொதல்ல இங்கயிருந்து கிளம்பு!” அவன் அழுத்தமாகச் சொல்ல, பதறியபடி அவனை நிமிர்ந்துப் பார்த்த கயல்விழி, “முடியாது வீர், என்னால உங்கள விட்டு எப்படி போக முடியும்? நா…நான் உங்க கூடதான்…” என்று சொல்லிமுடிக்கவில்லை, அவளுடைய தோள்களை ஆவேசமாக பற்றியிருந்தான் வீரஜ்.
“எத்தனை தடவைடீ சொல்றது உனக்கு? இங்கயிருந்தா உன்னை கொன்னுடுவாங்க. லுக், நீ மொதல்ல இங்கயிருந்து போயிடு!” வீரஜ் மீண்டும் அவளுக்கு புரிய வைக்க முயல, “ஆனா, நான் உங்களைவிட்டு…” மீண்டும் அவனுடைய பயத்தை புரிந்துக்கொள்ளாது கயல் அதே புராணத்தைப் பாட, அவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது எனலாம்.
“என்னடீ என்னைவிட்டு? ஏதோ நான் உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க. ஓஹோ! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் கான்செப்ட்டா? முட்டாள் முட்டாள்! நான் உன்னை எதுக்காக கல்யாணம் பண்ணேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒரு புருஷன் எதையெல்லாம் பண்ணக் கூடாதோ, அதையெல்லாம் நான் பண்ணியிருக்கேன். உன்னை ரொம்ப காயப்படுத்தியிருக்கேன். ஏன், இந்த காயம் கூட என்னாலதானே?” கோபத்தில் திட்டிக்கொண்டேச் சென்ற வீர், அவளுடைய கன்னத்திலிருந்த தன் விரல் தடத்தை மெல்ல வருட, வலியில் விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், அவன் விழிகளை ஆழ்ந்து நோக்கினாள்.
“நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன் வீர்” அவளுடைய வார்த்தைகளிலும் விழிகளிலும் தெரிந்த காதலில் திக்குமுக்காடிப் போய்விட்டான் அவன். இத்தனைநாள் அவளுடைய காதலை அவன் பயன்படுத்திய விதத்தில் அவனுக்கே தன்னை நினைத்து அருவருப்பு!
கீழுதட்டைக் கடித்து, விழிகளை மூடி உணர்வுகளை கட்டுப்படுத்திய வீரஜ், அவளை நிமிர்ந்துப் பார்த்து, “என் கூட வா!” என்றுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் கீழ்தளத்திலுள்ள பேஸ்மன்ட் பகுதிக்குதான் அழைத்துச் சென்றான்.
அங்கிருந்து குறுக்குவழியாக வெளியேற ஒரு பூட்டப்பட்ட கதவு அங்கிருக்க, வேகமாகச் சென்று அதைத் திறக்க முயற்சித்தான் அவன். ஆனால், அந்த துருப்பிடித்த பூட்டு திறந்தபாடில்லை.
அவனுடைய முயற்சி வீண்போகவில்லை. தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவன் ஓங்கி பூட்டை அடித்ததில் பூட்டு உடைந்துவிட, கோடரியை கீழே போட்டு சுவரில் சாய்ந்து பெரிய மூச்சுக்களை விட்டுக்கொண்டான் வீரஜ். அவளோ பதட்டமாக தன்னவனையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி கயலை பார்த்தவன், மெல்ல அவளருகில் நெருங்கினான்.
அவள் தோளைப் போர்த்தியிருந்த முந்தானையால் அவள் தலையில் முக்காடு போல் போட்டுவிட்டவன், “இங்கயிருந்து போ!” தழுதழுத்த குரலில் சொல்ல, ‘முடியாது’ எனும் விதமாக அழுதுக்கொண்டே தலையாட்டிய கயல், “நீங்களும் என்கூட வாங்க வீர், என்னால தனியா போக முடியாது. பயமா இருக்கு. செத்தாலும் நான் உங்க கூடவே இருக்கேன்” கிட்டதட்ட கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள்.
அவளுடைய வார்த்தைகளில் அவளை முறைத்தவன், பின் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அவளிதழை சிறைப்பிடித்திருக்க, விழி விரித்தவள் பின் கண்ணீரோடு விழிகளை மூடி அவனுக்கு இசைந்துக்கொடுத்தாள். சொல்லப்போனால், காதலாக அவன் தன்னவளுக்கு கொடுக்கும் முதல் முத்தம் இது.
இன்றுதான் வாழ்நாளில் கடைசிநாள் என்பது போல் அவளிதழிலேயே குடியிருந்த வீரஜ், கோயிலில் கேட்ட பெரிய மணியோசை சத்தத்தில் நடப்புக்கு வந்து, செய்யும் காரியத்தை உணர்ந்து வேகமாக விலகினான். கயலோ அவன் விலகியதுமே உதட்டைப் பிதுக்கி அவனை நோக்க, விழிகளிலிருந்து விழிநீர் வழிய அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அவன்.
தன்னவளின் நெற்றியோடு நெற்றி ஒட்டி, “காதலுங்குற பெயருல உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் கயல். இப்போ உன்கூட வாழ ஆசைப்படுறேன், ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஐ லவ் யூ என்ட், ஐ ப்ரோமிஸ். கண்டிப்பா உன்னை தேடி வருவேன்” அத்தனை காதலோடுச் சொல்ல, அந்த வார்த்தைகள் அவளின் ஆழ்மனதில் ஆணியடித்தாற் போல் பதிந்தன.
உள்ளுக்குள் வலிக்க வலிக்க தன்னவளை அங்கிருந்து வெளியேற்றிய வீரஜ், கதவை இழுத்துச் சாத்தி கதவின் மேல் சாய்ந்து நின்றான். அவன் முகம் கோபத்தில் சிவந்திருக்க, விழிகளோ ஒரு சிலரை நினைத்து கனலை கக்கியது.

ASIN ‏ : ‎ B0BJL9BSNY
Accessibility ‏ : ‎ Learn more
Publication date ‏ : ‎ 17 October 2022
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1.4 MB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 515 pages
Page Flip ‏ : ‎ Enabled
Best Sellers Rank: #74 in Kindle Store (See Top 100 in Kindle Store) #5 in Romantic Suspense (Books) #34 in Romance (Kindle Store) #57 in Literature & Fiction (Kindle Store)
Customer Reviews: 4.2 4.2 out of 5 stars (27) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரகசிய ஸà...”

Your email address will not be published. Required fields are marked *

Shipping and Delivery

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.